X Close
X
+91-9846067672

விக்ரம் லேண்டருக்கு  சிக்னல்களை அனுப்பி தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி


சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பை மீட்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் குறைந்து வரும் நிலையில் நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரமின் சமிக்ஞைகளைப் பெற முயற்சி மேற்கொண்டு தங்களது விண் ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூலமாக அதற்கு ஹலோ... ஹலோ... என தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலையில் விக்ரம் லேண்டரிடமிருந்து 14 நாட்கள்வரை சமிக்ஞைகள் பெற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். லேண்டருக்கு சிக்னல் அனுப்பப்படும் போது நிலவு ஒரு வானொலி அலைவரிசையைப் போல் சிறிய அளவிலான சிக்னலை திருப்பி அனுப்புகிறது.நாசாவின் ஜேபிஎல், டிஎஸ்என் நிலையங்கள் கலிபோர்னியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய மூன்றுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் நான்கு பெரிய விண்ணில் ஆழமாக ஊடுருவி ஆய்வு செய்யும் ஆன்டெனாக்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களுடன் ரேடியோ வாயிலாக தொடர்புகொள்ளும் வசதியும் இங்கு உள்ளது.

இந்த நிலையங்களின் உதவியுடன் இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. பூமிக்கும் நிலவுக்குமான சரியான தூரத்தை கணிக்க நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் ஒன்று விக்ரமுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இதில் நாசா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.விக்ரம் நிலவில் தரையிறங்கும் போது அந்த லேசர் ரிப்ளெக்டரும் இயங்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் விக்ரம் நிலவின் பரப்பில் சிக்கிக் கொண்டிருப்பதால் நாசாவும் தனது பேலோட் வரிசை கண்ணாடிகளை இழந்து நிற்கிறது.

குறிப்பாக நாளை அல்லது நாளை மறுநாள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நாசா நிறுவனம் கூறி உள்ளது. வருகிற 20-ந்தேதிக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் அதன் பிறகு அதை பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.