X Close
X
+91-9846067672

சனி கிரகத்திற்கு மேலும் 20 புதிய நிலவுகள் இருப்பது கண்டுபிடிப்பு



சனி கிரகத்தை  சுற்றி  இருபது  புதிய நிலவுகள் (துணை கோள்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம்  வளைய கிரகமான சனி கிரகத்திற்கு மொத்தம் 82  நிலவுகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் வைத்து  இருந்த  கிரகம் வியாழன் ( 79 நிலவுகள்) என்ற பெருமையை தற்போது  சனிக்கிரகம்  பெற்று உள்ளது. 

கார்னகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ்  நிறுவனத்தின் வானியலாளர்  ஷெப்பர்டும் அவரது குழுவும்  ஹவாய் தீவில்  ஒரு  நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனியின் 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து உள்ளனர். நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழன்  மட்டுமே  மிகப்பெரிய சந்திரனைக் கொண்டுள்ளது. வியாழனின்  மிகப்பெரிய நிலவின் அளவு பூமியின் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும். இதற்கு நேர்மாறாக, சனியின் 20 புதிய நிலவுகள் மிக சிறியவையாகும்  ஒவ்வொன்றும் 5 கிலோ மீட்டர் விட்டம் கொண்டவை தான்.

ஷெப்பர்ட்டின் கூற்றுப்படி, சனியைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 1.6 கிலோ மீட்டர்  விட்டம் உடைய சிறியதாக இருக்கும் நிலவின் பட்டியலை வானியலாளர்கள் வைத்து உள்ளனர். இந்த  சிறிய நிலவுகளை ஆராய எதிர்காலத்தில்  பெரிய தொலைநோக்கிகள் தேவைப்படும்.வானியலாளர் ஸ்காட் ஷெப்பர்ட்  கூறும் போது  "சனிக்கிரகம்  உண்மையான நிலவுகளின்  ராஜா என்பதைக் கண்டுபிடித்தது வேடிக்கையாக இருந்தது.  சுமார் 100 டைனியர் நிலவுகள் கூட சனியைச் சுற்றி வருகின்றன, அவை இன்னும் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன.

வியாழனை விட சனியைச் சுற்றி உள்ள  நிலவுகளைக் கண்டுபிடிப்பது மிக கடினம் ஏன் என்றால்  சனிகிரகம்  அவ்வளவு தூரம்   உள்ளது. இந்த நிலவுகள் கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள் ஆகும்.  எனவே அவற்றைப் ஆய்வு செய்வதன்  மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின  என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்  என கூறினார்.