X Close
X
+91-9846067672

விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் இஸ்ரோ...!



விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தை இஸ்ரோ வரும் 2022ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. முதல் ககன்யான் விண்கலம் 3 விண்வெளி வீரர்களை சுமந்து செல்ல உள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. வீரர்களுக்கு நடந்த உடல்தகுதி சோதனையை இந்திய விமானப்படை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

தீவிரமான உடற்திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் மனோதிடம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களில் 3 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்ப தேர்வு செய்யப்படும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்கும் என மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.