X Close
X
+91-9846067672

தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை...!


petrol-diesel04022019045026

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.01ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.36 காசுகளாகவும் உள்ளது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

(ANN NEWS)