X Close
X
+91-9846067672

உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் நிறுத்தம்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்த ஜோடியில் ஓரளவு ரன் சேர்த்த கருணாரத்னே 30 ரன்னில் கேட்ச் ஆனார். 

பின் களமிறங்கிய திரிமன்னே 25 ரன்னில் போல்ட் ஆக அவரை தொடர்ந்து ஒருபந்து இடைவெளியில் குசல் மென்டிஸ் 2 ரன்னிலும், மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து முகமது நபியின் சுழலில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெயா டிசில்வா ரன் எதுவும் எடுக்காமலும், திசரா பெரேரா 2 ரன்னிலும், இசுரு உதனா 10 ரன்னிலும், என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி தனது அரைசதத்தை பதிவு செய்த குசல் பெரேரா 78 ரன்னில் அவுட் ஆனார்.

இந்நிலையில், தற்போது 33 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. சுரங்கா லக்மல் மற்றும்  மலிங்கா களத்தில் உள்ளனர்.